பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; மந்திரி ஜெயந்த் பாட்டீல் சொல்கிறார்


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; மந்திரி ஜெயந்த் பாட்டீல் சொல்கிறார்
x
தினத்தந்தி 6 March 2020 5:00 AM IST (Updated: 6 March 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. பின்னர் அந்த கட்சி கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாரதீய ஜனதா தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளது. இந்தநிலையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி ஜெயந்த் பாட்டீல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

எங்களுடன் தொடர்பில் இருக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நல்ல உறவை பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது என்பது சரியல்ல. நாங்கள் அந்த தவறை செய்ய விரும்பவில்லை. எங்கள் கவனம் நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வது தான்.

எங்களுடன் தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கான பணிகளை நாங்கள் செய்ய வேண்டும். அவர்களின் மனநிலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story