சமையல் செய்தபோது வலிப்பு வந்ததால் தீயில் உடல் கருகி இளம்பெண் சாவு


சமையல் செய்தபோது வலிப்பு வந்ததால் தீயில் உடல் கருகி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 7 March 2020 3:45 AM IST (Updated: 7 March 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்தபோது வலிப்பு வந்ததால் தீயில் உடல் கருகி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி தோட்ட குடியிருப்பை சேர்ந்த வேலுச்சாமி மனைவி ரேவதி (வயது 30). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ரேவதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் அப்படியே நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிர்பாராவிதமாக அடுப்பில் இருந்த தீ ரேவதியின் சேலையில் பிடித்து எரிந்தது. இதில் அவர் உடல் கருகினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரேவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்தில் இறந்துபோன ரேவதிக்கு சாதனா என்ற 6 வயது மகளும், திருப்பதி என்ற 9 மாத கைக்குழந்தையும் உள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story