குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்  கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 8 March 2020 5:00 AM IST (Updated: 7 March 2020 5:54 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

நெல்லை, 

குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம் 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மத்திய அரசின் ‘போ‌ஷன் அபியான் பக்வாடா‘ திட்டத்தை நெல்லை மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள் சத்தான குழந்தைகளாக பிறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கர்ப்பகாலம் முதல் குழந்தை பிறந்து 2½ ஆண்டு காலம் வரை சத்தான உணவுகளை வழங்கிட அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சத்தான உணவுகளை வழங்குவதற்கு மட்டுமல்லாமல் விளையாட்டு மூலம் கல்வி செயல்வழி கற்றல் உள்ளிட்ட அடிப்படை அறிவு சார்ந்து கல்வியையும் வழங்கி வருகிறார்கள்.

ரத்தசோகை இல்லாத குழந்தைகள் 

மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாகவும் ‘போ‌ஷன் அபியான்‘ என்ற திட்டத்தில் எடைக்குறைவு இல்லாத குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை திகழ செய்யும் வகையில், பிறந்த குழந்தைகளை 1,000 நாட்கள் கண்காணித்து வளர்த்திட அரசு ‘போ‌ஷன் பக்வாடா‘ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்போது ஆண்களுக்கும் விழிப்புணர்வை எற்படுத்தி உள்ளனர்.

குழந்தைகளை பேணி பாதுகாத்திட இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் எடைக்குறைவு, ரத்தசோகை இல்லாத சத்தான குழந்தைகளை உருவாக்கிட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊழியர்கள் உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூரியா, உணவு நியமன அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story