கோவில்பட்டி அருகே பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்
கோவில்பட்டி அருகே பாரம்பரிய உணவுகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பாரம்பரிய உணவுகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலக மகளிர் தின விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குலசேகரபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், பஞ்சாயத்து தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரம்பரிய முறைப்படி பெண்கள் உரலில் உலக்கையால் கம்பு தானியங்களை குத்தி அரைத்தனர். பின்னர் அவற்றை முறத்தால் படைத்து தூசிகளை அகற்றினர்.
விழிப்புணர்வு
இதேபோன்று பாசி, உளுந்து போன்ற பயிர்களை திருகையில் இட்டு உடைத்து, முறத்தால் படைத்து தூசிகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாரம்பரிய உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன், சங்க சாலை பாதுகாப்பு தலைவர் முத்து செல்வம், நிர்வாகிகள் சீனிவாசன், பாபு, ரவிமாணிக்கம், வீராச்சாமி, பிரபாகரன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story