16-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்


16-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 16-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று தமிழக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி ஈரோட்டில் செல்லபாட்ஷா வீதியில், முஸ்லிம்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந்தேதியில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 16-வது நாளாக தொடர்ந்து. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story