லத்தேரி அருகே மாடு விடும் விழா


லத்தேரி அருகே மாடு விடும் விழா
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 11:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம், லத்தேரியை அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் தோசாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் விழா நடைபெற்றது.

கே.வி.குப்பம், 

மாடு விடும் விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கோவில் மீதும் வீடுகளின் மாடிகள் மீதும் அமர்ந்து சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்த்து ரசித்தனர். இளைஞர்கள் காளை ஓடும் தெருவில் நின்றுகொண்டு காளைகளை உற்சாகப்படுத்தினர். அப்போது சில மாடுகள் தெருவில் ஓடாமல் பொதுமக்கள் பக்கமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவையொட்டி தாசில்தார் (பொறுப்பு) ஹெலன் ராணி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பலராமன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story