கொரோனா குறித்து ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி வசதி கலெக்டர் தகவல்
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதள தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கட்டணமில்லா தொலை பேசி மூலம் ஆலோசனை பெறலாம் என்றும் கலெக்டர் கூறியுள்ளார். கலெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது.
விருதுநகர்,
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் தற்போது வரை எதுவும் இல்லை. இருப்பினும், உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முறைகள் குறித்தும், கைகளை சுத்தமாக கழுவும் முறைகள் குறித்தும் பொது சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்ற இடங்களில் விளம்பர பதாகைகளாக அமைத்திடவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்திடவும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மேலும், 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், 24 மணி நேர உதவிக்கு 01123978046 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், 0442951 0400, 0442951 0500 என்ற தொலைபேசி எண்களுக்கும் மற்றும் 9444340496, 8754448477 என்ற கைபேசி எண்களுக்கும் தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். இளநீர், கஞ்சி, ஓஆர்எஸ் போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்வது அவசியமாகும்.
மேலும், இந்த வைரஸ் பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் யூகங்களின் அடிப்படையிலான தகவல்களை முழுமையாக நம்பாமல், மருத்துவமனைகளை அணுகி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்படி மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story