சர்வதேச மகளிர் தினம்: பெண் போலீசாருக்கு கமிஷனர் ரோஜா பூ வழங்கி வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் ரோஜா பூ வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னை,
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. விழாவில் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரோஜா பூ வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை கமிஷனர்கள் மகேஷ்வரி, விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு, எழில் அரசன், ஜெயகவுரி உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உள்பட 800 பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story