இந்து- இஸ்லாமிய அமைப்புகள் போராட்ட அழைப்பு: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் அடைப்பு பஸ்கள் வழக்கம் போல் ஓடின
இந்து- இஸ்லாமிய அமைப்புகள் தனித்தனியாக விடுத்த அழைப்பை ஏற்று கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோவையில் நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மர்மநபர்களால் தாக்கப்பட்டார்.
இதை கண்டித்தும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இது போல் கோவை கணபதி வேதாம்பாள் நகரில் உள்ள இதாயத்துல் மசூதியில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் காந்திபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினரும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி கோவையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாநகரில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில இடங்களில் மட்டும் டீ கடைகள் திறந்து இருந்தன. கோவையில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, திருச்சி ரோடு, கரும்புக்கடை, போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட்டுகள் முழுமையாக மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் சூலூர், கருமத்தம்பட்டி, தொண் டாமுத்தூர், ஆனைமலை, மதுக்கரை, காரமடை உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன.
கடையடைப்பு போராட்டம் நடந்தாலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. ஆனாலும் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆட்டோக்கள், கால் டாக்சிகள் குறைந்த எண்ணிக்கையில் ஓடின. டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தன. அங்கு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று சனிக்கிழமை என்றாலும் சில பள்ளிகள், கல்லூரிகள் திறந்து இருந்தன.
கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஜெயந்த்முரளி, சங்கர் ஜூவால் மேற்பார்வையில் கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார் மற்றும் 300 மத்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமையில் அதிரடிப்படை போலீசாருடன் கொடி அணிவகுப்பு காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
கடையடைப்பு போராட்டத்தையொட்டி கோவை புறநகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story