மாணவர்களை திணறடித்த பிளஸ்-1 ஆங்கில தேர்வு ஆசிரியர்கள் கருத்து


மாணவர்களை திணறடித்த பிளஸ்-1 ஆங்கில தேர்வு ஆசிரியர்கள் கருத்து
x
தினத்தந்தி 8 March 2020 4:10 AM IST (Updated: 8 March 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 ஆங்கில தேர்வு மாணவர்களை திணறடித்துள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், 

பிளஸ்-1 ஆங்கில பொதுத்தேர்வில் அதிக வினாக்கள் பாடத்துக்கு உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அதுவும் உருவாக்கப்பட்ட (கிரியேட்டிவ்) வினாக்களாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல மாற்றங்களுடன் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தி பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் முதல் பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

பிளஸ்-2 ஆங்கில புத்தகத்தில் இல்லாத, வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வுக்கு கேட்பது போல் இடம் பெற்ற வினாக்களால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் பிளஸ்-1 ஆங்கில தேர்விலும் உருவாக்கப்பட்ட வினாக்களே அதிக அளவில் கேட்கப்பட்டிருந்தன.

திணறிய மாணவர்கள்

இது குறித்து திருப்பூரை சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

புதிய வினாத்தாள் முறையில் முதல் தேர்விலேயே அதிக அளவில் கடினமான வினாக்கள் இடம் பெற்றுள்ளது மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-1 ஆங்கில தேர்வில் பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து 50 சதவீதத்துக்கும் குறைவான வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. அதிலும் சில கடின முறைகள் புகுத்தப்பட்டிருந்தன.

மற்ற வினாக்கள் பாடத்தில் உள்ளவை என்றாலும் போட்டித்தேர்வுக்கு இணையான கிரியேட்டிவ் முறையில் கேட்கப்பட்டுள்ளன. 50 சதவீதத்துக்கு மேல் கடின வினாக்கள் இடம் பெற்றுள்ளன. கற்பித்தல் முறையில் அந்த அளவுக்கு மாற்றம் கொண்டு வந்த பின் இது போன்ற வினாக்கள் கேட்டிருக்கலாம். தற்போது மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story