பின்னலாடை கண்காட்சி நிறைவு: ரூ.400 கோடிக்கு வர்த்தக பேச்சுவார்த்தை
பின்னலாடை வர்த்தக கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ரூ.400 கோடிக்கு வர்த்தக ேபச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
இந்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவனம், திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில் திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் பின்னலாடை வர்த்தக கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரை ஏற்றுமதியாளர்களாக்கும் வகையில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 150 அரங்குகள் இடம்பெற்று இருந்தன. பல்வேறு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.
மராட்டிய எம்.பி.
இந்த கண்காட்சியின் நிறைவுநாளான நேற்று மராட்டிய எம்.பி. சுபாஷ் பாம்ரே, கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். அரங்குகள் அமைத்திருந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்களையும் அவர் பார்வையிட்டார். ஜவுளித்தொழில் மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஜவுளித்துறை மந்திரியிடம் நேரில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபுஜி, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், அண்ணாத்துரை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
ரூ.400 கோடி
நேற்றுடன் கண்காட்சி நிறைவடைந்தது. இந்த கண்காட்சியை 3 ஆயிரம் பார்வையிட்டனர். ரூ.400 கோடிக்கு வர்த்தக ேபச்சுவார்த்தை நடைபெற்றதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story