காட்டுயானைகள் அட்டகாசம்: மலைப்பாதையில் வனத்துறை அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு
காட்டுயானைகள் பஸ் கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்தன. இதனைதொடர்ந்து மலைப்பாதையில் வனத்துறை அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆழியார் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுயானைகள் பல மாதங்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் ஆழியார் வனத்துறையின் சோதனை சாவடியிலிருந்து செல்லும் சமதளப்பகுதியை ஒட்டிய சாலையிலும், குரங்குஅருவி, நவமலை பிரிவு, காண்டூர் கால்வாய் வாய்க்கால் மேடு பகுதியிலும் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்துவதும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு சென்ற அரசு பஸ்சை காண்டூர்கால்வாய் அருகே வழி மறித்த காட்டுயானைகள் அரசு பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்தன.இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை களஇயக்குனர் ஆரோக்கியராஜ்சேவியர் உத்தரவின் பேரில் புதிதாக வனத்துறையில் தொடங்கப்பட்டுள்ள வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் ஆழியார்,குரங்குஅருவி,காண்டூர் கால்வாய் பகுதி உட்பட வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் சிறப்பு பாதுகாப்பு பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story