குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இந்தியாவை நேசிக்கக்கூடிய வகையில் தி.மு.க.வின் செயல்பாடு இருக்க வேண்டும் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேட்டி
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இந்திய நாட்டை நேசிக்கக்கூடிய வகையில் தி.மு.க.வின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வருகிற போராட்டம் தேச விரோத போராட்டமாகவும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரிக்கக்கூடிய போராட்டமாகவும் மாறி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் இந்திய நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல எந்த நாட்டு மக்களுக்கும் பாதிப்பு இல்லை என்று பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் உள்பட அனைவரும் விளக்கி கூறிய பின்னரும் இந்த போராட்டம் தொடருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வின் செயல்பாடுகள் வேறுபட்டு இருக்கிறது. இந்திய தேசத்திற்கு ஆதரவாக இந்திய நாட்டு அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தற்போது நடைபெறும் போராட்டம் பாகிஸ்தானுக்கு ஆதரவான போராட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அந்த செயலை செய்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதை தி.மு.க. விட்டுவிட்டு தேச பக்தியோடும், இந்திய நாட்டை நேசிக்கக்கூடிய வகையிலும் அவர்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது தங்களையே அழிக்கும்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய நாட்டை சேர்ந்த எந்தவொரு நபருக்கும் பாதிப்பு கிடையாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தும் விஷயம். இந்த பதிவேட்டால் எந்த மதத்தினருக்கும் பாதிப்பில்லை. அப்படியானால் எதற்கு போராட்டம் நடத்த வேண்டும்.
குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் வந்துள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும். இங்குள்ள இலங்கை தமிழர்களிடம் கருத்து கேட்டதில் அவர்கள் இலங்கை செல்லவே விரும்புகின்றனர். இவர்கள் இலங்கை சென்றால்தான் அங்கும் தமிழர்களின் ஆதிக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் கலிவரதன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ராம.ஜெயக்குமார், பொருளாளர் சுகுமார், இணை பொறுப்பாளர் அருள், நகர தலைவர் ஜெய்சங்கர், வணிகர்அணி கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், அறிவுசார்அணி மாவட்ட தலைவர் தனசேகரன், மாவட்ட செயலாளர் துரை.சக்திவேல், தொழிற்பிரிவு தலைவர் ஜோதிராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story