சங்கராபுரம் அருகே சாலை சீரமைப்பு பணியை அதிகாரி ஆய்வு


சங்கராபுரம் அருகே சாலை சீரமைப்பு பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2020 5:44 AM IST (Updated: 8 March 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே சாலை சீரமைப்பு பணியை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே ஆலத்தூர்- மூரார்பாளையம் இடையே உள்ள சாலை பலத்த சேதமடைந்து காணப்பட்டது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.40 லட்சம் செலவில் ஆலத்தூர்-மூரார்பாளையம் சாலையை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து அங்கு சாலை சீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியை விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பகண்டை கூட்டுரோடு- பாவந்தூர் இடையே 18 கி.மீட்டர் தூரமுள்ள சாலை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது அவர் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலை நல்ல தரத்துடன் அமைக்கப்பட்டு வருகிறதா? என்பதை நவீன எந்திரம் மூலம் சோதனை செய்து பார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணியையும் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் தேவயிறக்கம், சங்கராபுரம் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகர் மற்றும் சாலை பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story