மூலைக்கரைப்பட்டி அருகே பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை


மூலைக்கரைப்பட்டி அருகே பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2020 3:30 AM IST (Updated: 8 March 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி, 

மூலைக்கரைப்பட்டி அருகே பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்–1 மாணவி 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழஅரியகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகள் ராமலட்சுமி (17). இவர் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். ராமலட்சுமி சரியாக படிக்காமல் வீட்டில் அடிக்கடி டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முருகன் கண்டித்தாராம்.

இதனால் ராமலட்சுமி மனம் வெறுப்பு அடைந்து சம்பவத்தன்று வீட்டில் விவசாயத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு 

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ்–1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story