கள்ளக்குறிச்சி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்


கள்ளக்குறிச்சி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 March 2020 3:45 AM IST (Updated: 9 March 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இந்திலியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக சரக்கு வாகனத்தில் சென்றனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் அதே சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர். சரக்கு வாகனத்தை தென்கீரனூரை சேர்ந்த பழனிசாமி (வயது 42) என்பவர் ஓட்டினார்.

தென்கீரனூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிக்கெட்டு ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தென்கீரனூரை சேர்ந்த பானுமதி (35), தெய்வானை (65), அஞ்சலை (55), செல்வி (60), டிரைவர் பழனிசாமி உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

வலியால் அலறி துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story