20 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். 20 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மும்பை,
மும்பையை தலைமையகமாக கொண்டு 2004-ம் ஆண்டு யெஸ் வங்கி தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளில் இந்த வங்கியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக வளர்த் தெடுத்தவர், அதன் நிறுவனர் ராணா கபூர் (வயது 62).
ஆனால் இப்போது அதே ராணா கபூரின் தவறான நிர்வாகத்தாலும், பிற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பெருந்தொகையை கடன்களாக கொடுத்து வாராக்கடன்கள் பெருகியதாலும், யெஸ் வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இதை பாரத ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து, நெருக்கடியான சூழலில், வங்கி நிர்வாகத்தை கடந்த வியாழக்கிழமையன்று முடக்கியது. அத்துடன் யெஸ் வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
இந்த வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே திரும்ப எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வங்கி கிளைகளில் பணத்தை திரும்ப எடுக்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த வங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததில், ராணா கபூரின் குடும்பத்தினருக்கு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அமலாக்கத்துறை இயக்குனரகம் நடவடிக்கையில் இறங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமான, மும்பை ஒர்லி சமுத்ரா மகால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
அந்த சோதனைகளை அடுத்து, அங்கு வைத்து ராணா கபூரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அவரது வாக்குமூலத்ததை பதிவு செய்தனர்.
அடுத்த கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் மதியம் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே கூடுதல் தகவல்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்காக ராணா கபூரின் 3 மகள்களான ராகீ கபூர் தாண்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனைகளை நடத்தினர்.
ராணா கபூர் மனைவி பிந்து, மகள்கள் ராகீ கபூர் தாண்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும், சில நிறுவனங்களுக்கும் இடையே குற்ற தொடர்பு இருப்பதாக தெரிய வந் துள்ளது.
இந்தநிலையில்தான் 20 மணி நேர விசாரணைக்கு பின்னர் ராணா கபூரை, நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மும்பை பாலர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு வசதி நிதி நிறுவனமான டி.எச்.எப்.எல். நிறுவனத்துக்கு யெஸ் வங்கி வழங்கிய பெரும் கடன், வாராக்கடன் ஆகி இருப்பது அமலாக்கத்துறையின் கழுகுப்பார்வையில் சிக்கி உள்ளது.
இந்த டி.எச்.எப்.எல். நிறுவனம், மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கடனை வழங்கியது பற்றியும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெருமளவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு, ராணா கபூர் அவற்றுக்கு பெருமளவு கடன் வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த லஞ்ச பணத்தை ராணா கபூர் நேரடியாக வாங்காமல் மனைவி மற்றும் மகள்களின் வங்கிக்கணக்குகளில் செலுத்த வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்தெல்லாம் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைக்கு பின்னர் ராணா கபூரை மும்பை விடுமுறை கால சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு மனு தாக்கல் செய்தனர்.
யெஸ் வங்கியில் நடந்துள்ள முறைகேடுகளில், ராணா கபூர் குடும்பத்தினர் நடத்தி வருகிற நிறுவனங்களின் பங்கு குறித்து விசாரிப்பதற்கு அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் ஆகிறது என அமலாக்கத்துறை சார்பில் கூறப்பட்டது.
ஆனால் ராணா கபூர் தரப்பில் ஆஜரான வக்கீல், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவரை வேண்டுமென்றே அமலாக்கத்துறையினர் குறி வைப்பதாகவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ராணா கபூரை வரும் 11-ந் தேதி வரை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ராணா கபூர் மற்றும் அவரது மகள்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கியமான பல ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும், குறிப்பாக அவரது குடும்பத்தினர் செய்துள்ள ரூ.2,000 கோடி முதலீடுகள், அவர்கள் வாங்கியுள்ள 44 விலை உயர்ந்த ஓவியங்கள், அவர்களது ஒரு டஜன் ஷெல் நிறுவனங்கள் (போலியான நிறுவனங்கள்) பற்றிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், இவையெல்லாம் இப்போது ராணா கபூரை சிக்கலுக்கு ஆளாக்கி இருப்பதாகவும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையம் நீள்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராணா கபூர் மனைவி, மகள்களின் வாக்குமூலத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்து, அவற்றின் அடிப்படையிலும் அவரிடம் கேள்விகள் எழுப்பி பதில் பெறுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Related Tags :
Next Story