மேட்டூர் அனல்மின்நிலையத்தில், 110 நாட்களுக்கு பிறகு முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடக்கம்


மேட்டூர் அனல்மின்நிலையத்தில், 110 நாட்களுக்கு பிறகு முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 9 March 2020 1:00 PM IST (Updated: 9 March 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அனல்மின்நிலையத்தில், 110 நாட்களுக்கு பிறகு முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் பழைய அனல் மின்நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு முதலாவது யூனிட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வந்தது. 

நேற்று முன்தினம் இந்த பணி முடிவடைந்தது. இதையடுத்து 110 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் மேட்டூர் அனல் மின்நிலைய முதலாவது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் 2-வது யூனிட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. 

இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின்நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Next Story