சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மின்சார ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது


சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு   மின்சார ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது
x
தினத்தந்தி 10 March 2020 3:30 AM IST (Updated: 9 March 2020 10:29 PM IST)
t-max-icont-min-icon

புறநகர் மின்சார ரெயிலில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.

சென்னை, 

சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டைக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகள், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தின் வழியாக ஆந்திரா நோக்கி சென்ற மின்சார ரெயில்களில் திடீர் சோதனை நடத்தினர்.

500 கிலோ பறிமுதல்

இந்த சோதனையின்போது, பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் கேட்பாரற்று கிடந்த சிறிய மூட்டைகளில் கட்டப்பட்ட சுமார் 500 கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பஞ்செட்டியில் உள்ள நுகர்ப்பொருள் வாணிபக்கிடங்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story