குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
x
தினத்தந்தி 9 March 2020 8:45 PM GMT (Updated: 9 March 2020 7:34 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர், 

திருப்பூர் கலெக்டர் வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதி்ல் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியேர் உதவித்தொகை, சாலைவசதி, குடிநீர்வசதி, புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 332 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.58 ஆயிரத்து 690 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனமும், 1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்லடம் வட்டத்தை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்திற்கான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில், சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story