தூத்துக்குடி-வ.உ.சி.துறைமுகத்துக்கு இயக்கப்படும் சிவப்பு நிற அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு
தூத்துக்குடி-வ.உ.சி. துறைமுகம் இடையே இயக்கப்படும் சிவப்பு நிற அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ம.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய துறைமுகத்துக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கனவே குறைந்த பட்சமாக ரூ.7-ம், அதிகபட்சமாக ரூ.16-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, புதிய துறைமுகத்துக்கு சிவப்பு நிற பஸ் விடப்பட்டு உள்ளது. இந்த பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.11-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் பழைய கட்டணத்தையே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நினைவகம் அமைக்க வேண்டும்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பிரபு, வேல்ராஜ், மகேஷ், ராஜேஷ் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 15 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடியது. இதனால் மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் போற்றப்பட வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட தூத்துக்குடியின் மைய பகுதியில் தமிழக அரசு நினைவகம் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தை ஒதுக்கித்தர வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த வளர்ச்சி குறைந்த பெண், சந்தனமாரி நேற்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 25 வயதாகிறது. ஆனால் போதிய வளர்ச்சி இல்லாமல் மாற்றுத்திறனாளியாக உள்ளேன். எனது பெற்றோருக்கும் வயதாகிவிட்டதால் என்னை கவனிக்க முடியவில்லை. இதனால் எனக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
பட்டா
தூத்துக்குடி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், புளியம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் தனியாருக்கு பட்டா போட்டு உள்ளனர். ஆகையால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். பட்டா வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கடந்த 1-8-2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அப்போது கந்தக அமிலம் கொட்டியதால் காயம் அடைந்தேன். இதற்காக சிகிச்சை பெற்றும், இதுவரை உடல்நிலை சீராகவில்லை. ஆகையால் என்னுடைய முழு மருத்துவ சிகிச்சைக்கும், குடும்பத்துக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லகண்ணு கலெக்டரிடம் அளித்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தாமிரபரணியின் வடகால் வாய்க்கால் கரை வழியாக ஏரலுக்கு மினி பஸ் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Tags :
Next Story