பெலகாவி விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை இல்லை சுகாதாரத்துறை மீது பயணிகள் கடும் அதிருப்தி
பெலகாவி விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை இல்லை என்று சுகாதாரத்துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
பெங்களூரு,
சீனாவில் உருவாகி பலரது உயிரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் கால்பதித்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தென் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரளா அருகே உள்ள அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற பீதி மக்களிடையே பரவி உள்ளது.
தீவிர கண்காணிப்பு
ஆனால் கர்நாடகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.
மேலும் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முக்கிய விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாம் அமைத்து பயணிகளுக்கு சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளதால் அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பாதிப்பு ஏற்பட்டு விடகூடாது என்று சுகாதாரத்துறையினர் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தடுப்பு நடவடிக்கைகள் இல்லை
இதன் எதிரொலியாக மங்களூரு பஜ்பே பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம், பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் வடகர்நாடகத்தில் உள்ள பெலகாவி சாம்ரா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
பெலகாவியில் பரவ வாய்ப்பு
வடகர்நாடகத்தில் உள்ள பாகல்கோட்டை, பெலகாவி உள்பட சில மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பெலகாவி விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மருத்துவ பரிசோதனை ெசய்வது இல்லை. இந்த விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையும் இல்லை. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் பெலகாவி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை. இதனை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story