பவுர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர்


பவுர்ணமியையொட்டி   மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்   நிலவின் வெளிச்சத்தில் கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 10 March 2020 6:04 AM IST (Updated: 10 March 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் பவுர்ணமி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கடற்கரை கோவில் உள்ளது. இங்கு தினமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று கடற்கரை கோவிலை காண பலர் குவிகின்றனர். பவுர்ணமி தினத்தில் முழு நிலவானது கோவிலின் பின்னணியில் ரம்மியமாக தெரியும். இதனை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று வருகின்றனர்.

இதேபோல் பவுர்ணமி நாளான நேற்று மாலை 4 மணிக்கே சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அவர்கள் இரவு வரை காத்திருந்து முழு நிலவின் வெளிச்சத்தில் மிக அழகாக காட்சி அளித்த கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர். மேலும், இந்த ரம்மியமான காட்சியை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story