கோவில்பட்டி அருகே ரூ.63 லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகங்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்


கோவில்பட்டி அருகே ரூ.63 லட்சத்தில் புதிய கால்நடை மருந்தகங்கள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 March 2020 4:30 AM IST (Updated: 11 March 2020 5:31 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கால்நடை மருந்தகம் 

கோவில்பட்டி அருகே துறையூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர், 9 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சிறு வணிக கடனாக மொத்தம் ரூ.30 லட்சத்து 38 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.

தொடர்ந்து கோவில்பட்டி அருகே தெற்கு வண்டானத்தில் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கால்நடை பராமரிப்பு துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்களில் கால்நடைகளுக்கு இலவசமாக ஊசி, மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றார்.

பயணிகள் நிழற்குடை 


பின்னர் கோவில்பட்டி அருகே குருவிநத்தம் விலக்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்க மாரியம்மாள், துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கணேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story