ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு இளநீர் பறித்தபோது பரிதாபம்


ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு இளநீர் பறித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 March 2020 3:30 AM IST (Updated: 11 March 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மரம் ஏறும் தொழிலாளி 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வேதம்புதூரை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மகன் சீனி செல்வகுமார் (வயது 32). மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தென்னை மரம் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்க முயன்றபோது மரத்தின் அருகே சென்ற மின்சாரம் கம்பி மீது அவரது கை பட்டது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் சீனி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பெருத்த சோகம் 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சீனி செல்வகுமாருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளநீர் பறித்தபோது தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story