சாம்பவர் வடகரை அருகே குளத்தில் மூழ்கி பொக்லைன் டிரைவர் சாவு
சாம்பவர் வடகரை அருகே குளத்தில் மூழ்கி பொக்லைன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
சுரண்டை,
சாம்பவர் வடகரை அருகே குளத்தில் மூழ்கி பொக்லைன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பொக்லைன் டிரைவர்
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே உள்ள ஊர்மேலழகியான் பகுதியில் குளத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் திருவாரூர் மாவட்டம் நெய்குளம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவருடைய மகன் தினகரன் (வயது 24) பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வேலையை முடித்து விட்டு அங்குள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கி சாவு
இதனால் தினகரன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். உடன் வேலை செய்பவர்கள் அவரை காணவில்லை என தேடிச் சென்றபோது குளக்கரையில் இவரது ஆடைகள் இருந்ததை அடுத்து அந்த பகுதியில் தேடினர். அப்போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சாம்பவர்வடகரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story