நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 March 2020 3:30 AM IST (Updated: 11 March 2020 7:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், 14–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். 240 நாள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

2–வது நாளாக 

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஜோதி, ஏ.ஐ.டி.யு.சி. குமாரசாமி, ஐ.என்.டி.யு.சி. ராமசாமி, பாலசுப்பிரமணியன், சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யு மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story