சங்ககிரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் புதுமாப்பிள்ளை கைது


சங்ககிரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் புதுமாப்பிள்ளை கைது
x
தினத்தந்தி 12 March 2020 4:00 AM IST (Updated: 12 March 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

சங்ககிரி,

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் கோனேரிபட்டி ஊராட்சி பூமணியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). இருசக்கர வாகன மெக்கானிக். சங்ககிரி பகுதியில் 17 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஜெகன் சிறுமியின் வீட்டிற்கு சென்று கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

கைது

இதுகுறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவரவே சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில், ஜெகன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு பவானியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story