கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 12 March 2020 3:45 AM IST (Updated: 12 March 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள். அந்த வகையில் நேற்று 642 விவசாயிகள், 4 ஆயிரத்து 636 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இவற்றை விழுப்புரம், ஆத்தூர், திருப்பூர், மகுடஞ்சாவடி, சத்தியமங்கலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்து சென்றனர்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி எல்.ஆர்.ஏ. ரகம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 379க்கும், குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்து 409க்கும் விற்பனையானது. நேற்று மட்டும் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்தார்.

Next Story