கொட்டாம்பட்டி அருகே, வெள்ளினிப்பட்டி மஞ்சு விரட்டு - 300 காளைகள் சீறிப்பாய்ந்தன; 10 பேர் காயம்
கொட்டாம்பட்டி அருேக வெள்ளினிப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 300 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே வெள்ளினிப்பட்டியில் சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆண்டி கருப்பு சாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி ஐந்துநிலை நாடு வெள்ளினிப்பட்டி கிராமத்தின் சார்பாக மஞ்சு விரட்டு நடைபெற்றது.
வெள்ளினிப்பட்டியில் இருந்து கிராமத்தினர் ஜவுளி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேள தாளத்துடன் சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆண்டி கருப்புசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் சிங்கம்புணரி சேவுக மூர்த்தி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது.
பின்னர் கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் அனைத்து காளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டில் 10-பேர் காயமடைந்தனர்.
இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 300 காளைகள் பங்கேற்றன.
மஞ்சுவிரட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோா் குவிந்தனர்.
Related Tags :
Next Story