வங்கியில் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைதான ராஜஸ்தான் ஆசாமியிடம் ரூ.11 லட்சம் பறிமுதல்
பொங்கலூர் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநில ஆசாமியிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு கடந்த மாதம் 23-ந் தேதி இரவில் சென்ற ஆசாமிகள், ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்து, அங்கு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 1000 பவுனுக்கும் அதிகமான நகை மற்றும் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து நொறுக்கியதோடு, அந்த கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின் பேரில் 11 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று துப்பு துலக்கினர்.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் அனில் சிங் என்கிற அனில்குமார் (வயது 35) என்பவரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருப்பூர் அழைத்து வந்து, பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில், அனிகுமாரை 6 நாட்கள் காவலில் விசாரித்தனர். இந்த விசாரணை நேற்றுடன் முடிந்த நிலையில், அனில்குமாரை பல்லடம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் விசாரணையில் அனில்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வங்கி கொள்ளையில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இசார்கானை (34) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திருப்பூர் அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கைதான இசார்கானிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story