ஈரான் நாட்டில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - குடும்பத்தினர், கலெக்டரிடம் மனு


ஈரான் நாட்டில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - குடும்பத்தினர், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரான் நாட்டில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா தாகம் தீர்த்தாபுரம் மற்றும் காளசமுத்திரத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் ஈரான்நாட்டில் வேலை பார்க்கின்றனர். அவர்களை மீட்டு வரக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவிடம் தீர்த்தாபுரம், காளசமுத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், வடமலை, சம்பத், கணேசன், செல்வம், சாரதி, காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சேகர், சகாதேவன் உள்பட 350 இந்தியர்கள் ஈரான் நாட்டின் கிஸ் தீவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக உள்ளனர்.

இவர்கள் பணிபுரியும் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்ததாக கேள்விப்பட்டோம். அங்குள்ள எங்கள் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அச்சப்படுகிறோம். எனவே, எங்கள் பகுதியை சேர்ந்தவர்களைஈரான் நாட்டு கிஸ் தீவில் இருந்து பத்திரமாக மீட்டு அழைத்து வர மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Next Story