விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் திடீர் ஆய்வு


விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் - டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, குற்ற ஆவண பதிவேடுகள் துறை, கைரேகை பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் சென்று முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கோப்புகள், பதிவேடுகள் அனைத்தையும் முறையாக பராமரிக்கும்படியும், தேவைப்படும்போது உடனடியாக எடுத்து ஆவணங்களை சரிபார்க்கும்படியும் அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்று புகார் கொடுத்தும் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனுவை கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொண்டு அவர்களது புகார் மனுக்களை பரிசீலனை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு அனைவரும் சிறப்பாக பணியாற்றும்படி அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்தர், ராஜன், ரவீந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story