பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் இளவரசன், குருமூர்த்தி, கோட்ட செயலாளர்கள் செபஸ்டியான், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் கலைச்செல்வன், திட்ட பொருளாளர் செந்தில்கு£ர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் தேவைபடுபவர்களுக்கு உடனடியாக தொகையை வழங்க வேண்டும். அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மக்களின் வரிப்பணத்தை வீணாக்க கூடாது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். மறு சீரமைப்பு என்ற பெயரில் பொதுத்துறையான மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. நுகர்வோர்களின் உரிமைகளை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story