புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டி.ஜி.பி. சரண் ரெட்டி மரணம் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் அஞ்சலி


புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த   கூடுதல் டி.ஜி.பி. சரண் ரெட்டி மரணம்   முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 14 March 2020 4:27 AM IST (Updated: 14 March 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டி.ஜி.பி சரண் ரெட்டி நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் உடலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லம்பள்ளியை சேர்ந்தவர் சரண் ரெட்டி. இவர் 1993-ம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். இவர் விஜயாப்புரா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். மேலும் சி.பி.ஐ.யிலும் பணியாற்றினார். இதையடுத்து சரண் ரெட்டி, கர்நாடக சி.ஐ.டி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சரண் ரெட்டி கடந்த 3 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் கூடுதல் டி.ஜி.பி. சரண் ரெட்டி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக டாலஸ் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டது.

எடியூரப்பா அஞ்சலி

சரண் ரெட்டியின் உடலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில டி.ஜி.பி. பிரவீன் சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் மற்றும் ேபாலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து சரண் ரெட்டியின் உடல் அவரின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லம்பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (சனிக்கிழமை) அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த சரண் ரெட்டிக்கு காயத்ரி ரெட்டி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Next Story