உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம்
உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்ேவறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக இந்த நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகமாக கூடவேண்டாம் என்றும், அவ்வாறு கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானவர்கள் வருகிறார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வரும்பட்சத்தில், கூட்டத்தினருடன் செல்லாமல் இருக்கவும், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கோவில் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவில் வளாகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கோவில் உள்துறை அலுவலகம் மூலம் முகக்கவசம் வழங்குவதற்கும், அரசு மருத்துவமனைகளை அணுகிடவும் ஆலோசனை வழங்கிட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story