நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது


நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பொன்வேல் (வயது 22). இவர் தனது வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்து நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் பொன்வேல் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து பொன்வேலை கைது செய்தனர்.

Next Story