தென்காசியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


தென்காசியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை திருட்டு  மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

தென்காசி, 

தென்காசியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி 

தென்காசி குத்துக்கல்வலசை அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆதிமூலம். அவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 35), விவசாயி.

இவர் சம்பவத்தன்று அகஸ்தியர்பட்டிக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.3 லட்சம் நகை திருட்டு 

உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக தென்காசி போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி வீட்டில் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story