பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு


பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் ஒன்றியத்தில் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

கலசபாக்கம், 

கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோவில் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு வேலை செய்யும் இடத்திலேயே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார். வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அப்போது மணிகண்ட பிரபு கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் இந்த வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றால் தினமும் ஒரு நாளைக்கு சுமார் 20 முறையாவது 2 கைகளையும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனைத்தொடர்ந்து கடைபிடித்து வந்தால் வைரஸ் தாக்குதலுக்கு பயப்படத் தேவையில்லை என்றார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கலசபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆறுமுகம், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story