புகார்தாரர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


புகார்தாரர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்; போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 March 2020 3:45 AM IST (Updated: 14 March 2020 7:01 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் புகார்தாரர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம், 

விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்டரீதியாக செல்ல வேண்டும். குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. எந்த புகாராக இருந்தாலும் தொலைபேசி மூலமும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் சாலையில் செல்லும்போது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். 

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று எடுத்துரைத்தார். இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். 

இந்த கருத்தரங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, சந்திரகலா, தமிழரசி, ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, முருகன், நடேசன் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் சாலை விதிகளை கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Next Story