கூடங்குளம் 2–வது அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது


கூடங்குளம் 2–வது அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 7:19 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2–வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று காலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

வள்ளியூர், 

கூடங்குளம் 2–வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று காலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையம் 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் 2–வது அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தென்னக மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2–வது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் 14–ந் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2–வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியையும், பராமரிப்பு பணியையும் அதிகாரிகளும், என்ஜினீயர்களும் மேற்கொண்டு வந்தனர்.

மின்உற்பத்தி தொடங்கியது 

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவுபெற்று நேற்று காலை 8.10 மணி அளவில் 2–வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தற்போது 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என தெரிகிறது. முதல் அணு உலையில் தற்போது 980 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story