விக்கிரமசிங்கபுரத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


விக்கிரமசிங்கபுரத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை முயற்சி  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 15 March 2020 3:45 AM IST (Updated: 14 March 2020 7:40 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்–2 மாணவர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து பிளஸ்–2 மாணவர் தற்கொலைக்கு முயற்சித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ்–2 மாணவர் 

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அவருடைய மகன் துரைராஜ் (வயது 17). இவர் நெல்லை மாவட்டமம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் துரைராஜை சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த துரைராஜ், விடுதியின் மாடியில் இருந்து குதித்து விட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story