கேரளாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு எதிரொலி கோவில்பட்டி அய்யப்பன் கோவிலில் விரதம் முடித்த பக்தர்கள்
பெரும்பாலான பக்தர்கள், கோவில்பட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருமுடி இறக்கி விரதம் முடித்தனர்.
கோவில்பட்டி,
கேரளாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, அங்குள்ள சபரிமலை கோவிலுக்கு செல்லாமல் பெரும்பாலான பக்தர்கள், கோவில்பட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருமுடி இறக்கி விரதம் முடித்தனர்.
கொரானோ வைரஸ் பாதிப்பு
கேரள மாநிலத்தில் கொரானோ வைரஸ், பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால், அங்குள்ள சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது.
இதையடுத்து பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு, சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்த பெரும்பாலான பக்தர்கள் நேற்று கோவில்பட்டி பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள சின்ன சபரிமலை என்று அழைக்கப்படும் அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி புறப்பட்டு சென்றனர்.
இருமுடி இறக்கி விரதம் முடித்து...
அவர்கள் 18 படிகள் வழியாக சென்று, இருமுடி இறக்கி, அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனை முன்னிட்டு, கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் சிங்கம் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story