சமூக வலைத்தளங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் வெளியிட்ட கொரோனா திருக்குறள்
செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ‘கொரோனா குறள் வாழ்த்துகள்’ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
செங்கல்பட்டு,
சீனாவில், உருவாகி அங்கு பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆத்தூர் ஊராட்சியில் உள்ள வடபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் ‘கொரோனா குறள் வாழ்த்துகள்’ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்
‘கைகூப்பி கரம்சேர்த்து வணங்குதல் நன்று
மெய்க்கூப்பி வளரும் வாழ்வு’
என்பது போன்ற பல்வேறு திருக்குறள்களை வெளியிட்டுள்ளனர். இது பலரையும் கவர்ந்துள்ளது.
Related Tags :
Next Story