சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி, வளர்ச்சி அடைந்து வரும் ஊராட்சி ஆகும். இங்குள்ள பஜார் வீதியில் கடை வைத்திருக்கும் பெரும்பாலான வியபாரிகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு போட்டியாக தள்ளுவண்டிகளில் கடை நடத்தி வரக்கூடியவர்களும் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த நிலையில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார், நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி செயலாளர் ஆனந்த குமார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story