காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 ரவுடிகள் வாரணாசியில் கைது
காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 ரவுடிகள் வாரணாசியில் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பஞ்சுப்பேட்டை சின்ன தெருவைச் சேர்ந்தவர் தணிகா என்ற தணிகைவேல்(வயது 34). கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கொண்டு பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர். இவர் மீது 7 கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
காஞ்சீபுரம் கோரிமேடு எஸ்.என்.தாய் தெருவைச் சேர்ந்தவர் வசா என்ற வசந்த்(23), பெரிய காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்துரு என்ற சந்திரசேகர்(27). தணிகாவின் நண்பர்களான இவர்கள் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகளான இவர்கள் 3 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
3 பேர் கைது
இவர்கள் 3 பேரையும் பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், துளசி, முரளி மற்றும் 4 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாராணசிக்கு சென்ற தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் காஞ்சீபுரம் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story