அய்யம்பேட்டை குப்பை கிடங்கில் ‘தீ’ புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
அய்யம்பேட்டை குப்பை கிடங்கில் ‘தீ’ புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி.
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை நியூ டவுன் அருகே மயான சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி பேரூராட்சி செயல் அதிகாரி பொன்னுசாமி பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெப்பம் காரணமாக குப்பை கிடங்கின் அருகே உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உருகி சேதம் அடைந்தன.

Related Tags :
Next Story