கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய சமநிலை பால் பண்ணையில் (ஆவின் பால் பண்ணை) பால் மற்றும் தயிர் பாக்கெட் தயாரிக்கும் பிரிவை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் குளிர்சாதன அறையில் பால் பாக்கெட் இருப்பு எவ்வளவு உள்ளது.
மேலும், எவ்வாறு இருப்பு செய்கின்றனர்? என்பதையும், தினசரி பால், மோர் மற்றும் தயிர் விற்பனை அளவு குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
கூட்டம்
அதே போல் பால் விற்பனை நாள் ஒன்றுக்கு 21 ஆயிரத்து 500 லிட்டர் செய்யப்படுகிறது. மோர் 300 லிட்டரும், தயிர் 350 லிட்டரும் உள்ளூர் விற்பனை பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் விற்பனையாகிறது என ஆவின் பொதுமேலாளர் கலெக்டர் பிரபாகரிடம் தெரிவித்தார்.
பின்னர் ஆவின் அலுவலகத்தில், ஆவின் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது. இந்த ஆய்வின் போது ஆவின் தலைவர் குப்புசாமி, பொது மேலாளர் குமரன், உதவி பொது மேலாளர்கள் (பொறியியல்) துளசிதாஸ், (உற்பத்தி) பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story