கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருச்செந்தூர் கோவிலில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்:  திருச்செந்தூர் கோவிலில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 12:35 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

திருச்செந்தூர், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் கோவில் 

அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் அறிவுறுத்தலின் பேரில் கோவில் செயல் அலுவலர் அம்ரித் உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்கள். கோவிலில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது தரிசனம் பகுதி, அனைத்து கட்டண தரிசனம் பகுதி என பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருந்து தெளிக்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story