சங்கரன்கோவில் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி தற்கொலையா? போலீசார் விசாரணை


சங்கரன்கோவில் அருகே  கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி தற்கொலையா?  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 March 2020 3:30 AM IST (Updated: 15 March 2020 7:37 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தார்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் செந்தில்வேல் (வயது 23). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். வடக்கு அச்சம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆடு மேய்த்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அச்சம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ், போக்குவரத்து நிலைய அலுவலர் பார்வதிநாதன் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி பிணத்தை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மிதந்தவர் காணாமல் போன செந்தில்வேல் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்வேல் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story